அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளைத் தயாரிக்க தேங்காயின் பயன்பாடு மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது.
அவ்வாறான இந்தத் தேங்காயை சிறு துண்டுகளாக்கிக் காலை வேளையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் இதயம், சருமம், தலைமுடி, வயிறு என்பன ஆரோக்கியமாக இருக்கும்.
உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைத்து சமிபாட்டுப் பிரச்சினைகளைச் சரி செய்யும்.
தேங்காயில் அதிகமாக நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளமையினால், உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
வாழைப்பழம், அப்பிள் பழங்களில் உள்ள சத்துக்களை விட தேங்காயில் அதிகளவான புரதம் நிறைந்துள்ளது.
காலையில் தேங்காயின் சத்து உடலில் சேர்ந்தால் சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்றவற்றில் ஏற்படும் அனைத்துக் குறைபாடுகளும் நிவர்த்தியாகும்.