எலும்புகளின் உறுதியென்பது எமது உடலின் வலுவுக்குத் தேவைப்படுகின்ற முக்கிய சக்தியாகும்.
எலும்புகளின் உறுதியை அதிகரிக்கக் கூடிய கல்சியம், மக்னீசியம், புரதம் மற்றும் Vitaminகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டாலே போதும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
அவ்வாறான உணவு வகைகள் பின்வருமாறு...
● கல்சியம், Vitamin D, புரதம் ஆகிய சத்துகள் நிறைந்த பால், பாலாடைக்கட்டி(Cheese) மற்றும் தயிர்.
● எலும்பு முறிவுக்கான ஆபத்தைக் குறைக்கும் சோயா உணவுகள்.
● மக்னீசியம், கல்சியம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துகளைக் கொண்ட சியா(Chia) விதைகள்.
● உலர் திராட்சை மற்றும் அத்திப்பழங்கள்.
● Vitamin D, புரதம் மற்றும் கல்சியம் நிறைந்த மீன் உணவுகள்.
இவ்வாறான உணவுகளை குழந்தைகள், முதியவர்கள் மாத்திரமின்றி இளைஞர்கள் கூட எடுத்துக் கொண்டால், வயது முதிர்ச்சியின் போது எலும்புகளுக்கு ஏற்படும் பலவீனத்தைத் தடுக்க முடியும்.