வாய்ப்புற்று நோயை முழுமையாகத் தடுக்க முடியும் என்று உறுதி கூற முடியாவிட்டாலும், சில பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் அதன் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.
ஆகவே, அவ்வாறு நாம் கடைபிடிக்கவேண்டிய பழக்கங்கள் என்னவென்பதைப் பற்றிப் பார்க்கலாம்...
● புகையிலைப் பொருட்களைப் பாவித்தல், மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
● தினமும் இரண்டு முறை ஃபுளோரைடு கொண்ட பற்பசையால் பல் துலக்கி, பற்கள் மற்றும் ஈறுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
● காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சமச்சீரான உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது வாய்ப்புற்று நோயைத் தடுக்க உதவும்.
● HPV தடுப்பூசி குறித்து மருத்துவரிடம் ஆலோசித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
● வாயில் நீண்ட நாட்களாக ஆறாத புண், வெள்ளை/சிவப்பு நிறத் திட்டு, கட்டி, விழுங்குவதில் சிரமம் போன்ற மாற்றங்கள் இருந்தால் மருத்துவர் அல்லது பல் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
இவற்றில் புகையிலை பாவிக்காமல், பாக்கு பாவிக்காமல், மதுபானம் பாவிக்காமல் இருப்பதே வாய்ப்புற்று நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் முக்கிய பழக்கங்களாகும்.