கிரிக்கெட் பந்தை பளபளப்பாக்க வீரர்கள் உமிழ்நீரினை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைவர் கில், எச்சிலைப் பயன்படுத்துவதற்கான தடையை ஐ.சி.சி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.ஆனாலும் கில்லின் கோரிக்கைக்கு ஐ.சி.சி உடனடியாக செவிசாய்க்கும் எண்ணத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.