தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற 54ஆவது International Emmy Awards விழாவில் பங்கேற்று கவனம் ஈர்த்துள்ளார். இந்த விழாவில் அவர் விருது வழங்கும் நிகழ்விலும் கலந்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் இரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளன.
கறுப்பு நிற உடையில் விழாவில் தோன்றிய விஜய் சேதுபதி, சர்வதேசத் திரையுலகப் பிரபலங்களுடன் ஒரே மேடையில் பங்கேற்றமை தமிழ் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது இந்த நிகழ்வுப் பங்கேற்பு தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.