நட்டமடைந்த அமெரிக்க விமான நிறுவனமான Spirit Airlines இன் உள்துறைத் தரவுகளை 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குவதற்கு Google நிறுவனத்திற்கு நியூயோர்க் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தரவுகளைத் தனது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை மேம்படுத்த Google பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஊழியர்களின் மின்னஞ்சல்கள், ஆவணங்கள் மற்றும் நிறுவனச் செயற்பாடுகள் தொடர்பான தரவுகள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்குகின்றன. எனினும், தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அமெரிக்க அரசியல்வாதிகள் கவலை வெளியிட்டதைத் தொடர்ந்து, தரவுப் பாதுகாப்பு தொடர்பான மேலதிக நிபந்தனைகளை Google ஏற்றுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, ஊழியர்களின் சுகாதாரத் தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தனிப்பட்ட விபரங்கள் விற்பனையிலிருந்து நீக்கப்படவுள்ளன. AI தொழில்நுட்ப வளர்ச்சிக்காக நிறுவனங்களின் தரவுகள் பயன்படுத்தப்படுவது, தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களையும் மீண்டும் எழுப்பியுள்ளது.