Google Deep Mind நிறுவனம், முப்பரிமாண (3D) காட்சிகள் மற்றும் மெய்நிகர் சூழல்களை உருவாக்கும் ‘Genie 4’ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தச் செயலி, முந்தைய பதிப்பைவிட இரண்டு மடங்கு வேகத்தில் வீடியோக்களை உருவாக்கும் திறன் கொண்டது. மேலும், பயனர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வானிலை, Camera கோணங்கள் மற்றும் கதாபாத்திரங்களை மாற்றியமைக்க முடியும்.
Gemini உடன் ஒருங்கிணைந்து செயற்படும் இந்தத் தொழில்நுட்பம், யதார்த்தமான காட்சிகளையும் பின்னணி இசை மற்றும் ஒலிகளையும் உருவாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் AI தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.