உலகளவில் AI தொழில்நுட்பத்திற்குத் தேவையான Chip கள் மற்றும் கணினி வளங்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் தேவைகளைவிடத் தனது AI ஆராய்ச்சிக்கு Google முன்னுரிமை அளித்து வருகிறது.
Google நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குவதற்குத் தேவையான கணினி வளங்களை Google DeepMind ஆராய்ச்சிப் பிரிவுக்கு வழங்குவது முக்கியம் எனத் தெரிவித்துள்ளார். இதனால், Google Cloud சேவையின் மூலம் கிடைக்கக்கூடிய குறுகிய கால வருவாயையும் நிறுவனம் இழக்க நேரிடுகிறது.
AI தொழில்நுட்பத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், சிப்கள், சர்வர்கள் மற்றும் தரவு மையங்களின் தேவையும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், AI ஆராய்ச்சியையும் வாடிக்கையாளர் சேவைகளையும் சமநிலைப்படுத்துவது Google க்குச் சவாலாக அமைந்துள்ளது. இருப்பினும், எதிர்கால AI வளர்ச்சியில் முன்னிலை வகிப்பதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.