சென்னையில் இயங்கி வரும் பிரபல Amimation மற்றும் VFX நிறுவனமொன்று சமீபத்தில் Wings Of Fire என்கிற குறும்படத்தை வெளியிட்டிருந்தது. இந்த குறும்படம் AI தொழிநுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய போர்களை எதிர்த்தும், மனிதநேயத்தை வலியுறுத்தும் விதமாகவும், சிறிய பட்ஜெட்டில் மக்களிடம் இது குறித்த எண்ணத்தை உருவாக்குவதே இந்த குறும்படத்தின் நோக்கமாக காணப்படுகின்றது. இந்தக் குறும்படத்தை உருவாக்க 'Midjourney 2.5', 'ChatGPT', மற்றும் Googleஇன் 'Nano Banana Pro' உள்ளிட்ட தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் குறும்படம் சர்வதேச Higgs Field திரைப்பட விழாவுக்கும் தேர்வாகியுள்ளது. தற்போது இந்த குறும்படத்திற்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.