பிரேசில் நாட்டின் நட்சத்திரக் கால்பந்து வீரனான நெய்மாரின் ஜெர்ஸி இலக்கத்தை அந்த அணியின் முன்னணி வீரரான ரஃபின்ஹா பெற்றுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 5 ஆம் திகதி சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நெய்மாரின் 10ஆம் இலக்கத்தை பிரேசில் அணி தற்போது உத்தியோகப்பூர்வமாக ரஃபின்ஹாவுக்கு வழங்கியுள்ளது.
பிரேசில் கால்பந்து அணியின் எதிர்கால நட்சத்திரமாக வளர்ந்து வரும் ரஃபின்ஹா, தற்சமயம் நெய்மார் விளையாடிய பார்சிலோனா கால்பந்துக் கழகத்தின் அணித் தலைவராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.