18 Views
இந்தியச் சினிமாவின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இத்திரைப்படத்தை இயக்குகிறார். தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில், ஆலியா பட் சிவப்பு நிறத்தில் பிரமாண்டமான ஆடையும், இறகுகள் போன்ற தலையணியும் அணிந்து மிகவும் கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் காட்சியளிக்கிறார். சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படங்களுக்கே உரித்தான வழக்கமான கலைநயமும் பிரமாண்ட ஒளியமைப்பும் இந்த போஸ்டரிலும் பளிச்சிடுகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ஆலியா பட் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், இந்த 'லவ் & வார்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே பலமடங்கு அதிகரித்துள்ளது.