2020-இல் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் ரூ. 100 கோடிக்கும் அதிகமான பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.
இத்திரைப்படத்தில் நயன்தாராவுடன் சினேகா, ரெஜினா கேசண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, அபிநயா, இனியா, மைனா நந்தினி, துனியா விஜய், ராமச்சந்திர ராஜு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் மாதத்தில் திரைப்படம் வெளியாகும் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.