6 Views
COVID-19 பெருந்தொற்றுக் காலத்தில் வீரர்கள் மற்றும் நடுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு 2020ஆம் ஆண்டு இந்தத் தடை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் 2022ஆம் ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டது. பந்தின் ஒரு பக்கத்தைப் பளபளப்பாக வைத்திருப்பது Swing மற்றும் Reverse Swing பந்துவீச்சுக்கு உதவுவதால், இந்தத் தடை பந்துவீச்சாளர்களின் செயல்திறனைப் பாதிப்பதாகப் பலர் கருதுகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் Test போட்டி சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பந்து விரைவாக மென்மையடைவதால் விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினமாக இருப்பதாக Shubman Gill சுட்டிக்காட்டியிருந்தார். எனினும், எச்சிலைப் பயன்படுத்துவதால் பந்தின் தன்மையை மாற்றுவதைக் கண்காணிப்பது கடினம் என்பதுடன், சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளும் இருப்பதால், சர்வதேசப் போட்டிகளில் தற்போதைக்கு தடையைத் தொடர ICC முடிவு செய்துள்ளது.