இதுவரை நாம் Apple கையடக்கத்தொலைபேசிகளில் பயன்படுத்திய Siri வெறும் ஆரம்பம் தான் என்பது போல அடுத்தகட்ட செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் வேலையில் Apple நிறுவனம் தற்போது ஈடுபட்டுள்ளது.
இதுவரை நாம் Siriயிடம் நமக்கு தேவையான சில கட்டளைகளைத்தான் கொடுத்து வந்தோம். ஆனால் இனி Appleஇன் இந்த புதிய Proactive Agentic AI Assistant அவ்வாறு இல்லை.
உதாரணமாக உங்களுடைய பயணத்திற்கான சிறந்த விமானபயண சீட்டுக்களைத் தேடி, எனது பட்ஜெட்டிற்குள் இருக்கும் சிறந்த ஆலோசனையை Book செய்து, அதை எனது நாட்காட்டியில் சேர் என்பது போன்ற பல படிநிலைகள் கொண்ட ஒரு கோரிக்கையை நீங்கள் முன் வைத்தால் போதும். அதுவாகவே Appகளை யன்படுத்தி, தேவைப்பட்டால் மற்ற சேவைகளையும் ஒருங்கிணைத்து அந்த வேலையை முழுமையாக முடித்துவிடும்.
Apple நிறுவனம் ஒருபுறம் தனது சொந்த AIயை உருவாக்கினாலும், மறுபுறம் தனது Mac கணினிகளில் மூன்றாம் தரப்பு AI Agents ChatGPT போன்றவை செயல்படுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.