செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் புற்றுநோய், அல்சைமர் மற்றும் இதய நோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கான தீர்வுகளை அடுத்த 10 ஆண்டுகளுக்குள் கண்டறிய முடியும் என Anthropic நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய மருந்துகளைக் கண்டறியும் பணிகளில் செயற்கை நுண்ணறிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இத்தகைய நோய்களுக்கு பத்து ஆண்டுகளுக்குள் முழுமையான தீர்வு காண்பது சாத்தியமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு நோய்களைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகளை உருவாக்குதல் போன்றவற்றை விரைவுபடுத்தினாலும், புதிய மருந்துகளின் பாதுகாப்பையும் செயற்திறனையும் உறுதிப்படுத்த ஆய்வகப் பரிசோதனைகளும் மருத்துவப் பரிசோதனைகளும் அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.