அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கியது.
இதற்கிடையே அவுஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் உஸ்மான் கவாஜா எழுதிய சுயசரிதை புத்தகத்தில், பந்தை சேதப்படுத்திய சதித் திட்டம் குறித்து அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்று கூறி இருந்தார் கவாஜாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் Pat Cummins இவ்வாறு கூறியுள்ளார்.
"பந்தை சேதப்படுத்திய விவகாரம் குறித்து அணியில் உள்ள அனைவருக்கும் தெரியும் என்று கவாஜா கூறியிருப்பது 100 சதவீதம் முற்றிலும் தவறானது. இதை நான் கடந்த 8 ஆண்டுகளாக கூறி வருகிறேன். அப்படி ஒரு செயல் நடந்தது எனக்கு தெரியாது.கடந்த 8 ஆண்டுகளில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கலாச்சாரத்தை மீண்டும் கட்டமைக்க உதவிய அணியின் ஒரு பகுதியாக இருந்த கவாஜா இத்தகைய செயலை அங்கேயே தடுத்திருக்க வேண்டும்."எனக் குறிப்பிட்டுள்ளார்.