திராட்சையில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, மாரடைப்பு போன்ற இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
திராட்சையில், குறிப்பாக கறுப்பு மற்றும் சிவப்பு திராட்சைகளில் Antioxidants என்பன நிறைந்துள்ளன. இவை மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட சில வகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகின்றன.
வயதான காலத்தில் ஏற்படும் Cataract மற்றும் மாலைக்கண் போன்ற கண் பாதிப்புகளைத் தடுக்க திராட்சை உதவுகிறது. இது கண்களின் விழித்திரை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
திராட்சையில் உள்ள இரும்புச்சத்து இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக, உலர் திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது இரத்த சோகைக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.
திராட்சையின் Glycemic குறியீடு குறைவாக இருந்தாலும், இதில் இயற்கை சர்க்கரை உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி அளவோடு மட்டுமே சாப்பிட வேண்டும்.