மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இவருடைய ஆட்டம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் அணித் தலைவர் கெவின் பீட்டர்சன் தெரிவித்த கருத்து கிரிக்கெட் இரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
"IPL மினி ஏலத்தில் ஷாய் ஹோப் தனது பெயரைப் பதிவு செய்தால் சில நொடிகளிலேயே அவரை ஏலம் எடுப்பதற்காகக் கைகள் உயரும்" என ஷாய் ஹோப்பைப் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன்.