ஹொலிவூடின் பிரபல இயக்குநரான கிறிஸ்டோபர் நோலனின் 'The Odyssey' திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.
வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கதை, பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் நேர்த்தியான திரைக்கதை என இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுக்கே உரித்தான தனித்துவமான திரைப்பட பாணியானது இரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
'The Odyssey' திரைப்படம் இதுவரை இந்தியாவில் மட்டும் ₹250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தற்போது வரை வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
R-Rated திரைப்படமொன்று இந்த அளவுக்கு இரசிகர்களைக் கவர்ந்து வசூலில் அசத்தி வருவது சினிமா வட்டாரத்தில் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.