2027ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறவிருக்கும், முதலாவது மகளிர் சம்பியன்ஸ் கிண்ணக் கிரிக்கெட் தொடரை நடாத்தும் உரிமையை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அந்தவகையில் முதன் முறையாக இலங்கையில் ஒழுங்கு செய்யப்படவிருந்த ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் திட்டமிட்டபடி வேறொரு நாட்டில் நடாத்தப்படவுள்ளதாகவும், பெரும்பாலும் இந்தியாவில் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது .