தினமும் முடிக்கு Shampoo பயன்படுத்துவது நல்லதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
தலையில் எண்ணெய் அதிகமாக சுரக்கும் அல்லது நேரான, மெல்லிய முடி உள்ளவர்கள் தேவைக்கேற்ப தினமும் பயன்படுத்தலாம்.
அதே நேரத்தில், வறண்ட, சுருள் அல்லது தடிமனான முடி உள்ளவர்கள் தினமும் இதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
அதிகமாக Shampoo பயன்படுத்துவது முடியின் இயற்கையான எண்ணெயை நீக்கி, முடி வறண்டு போகவும் உடைந்து போகவும் காரணமாக இருக்கும். முக்கியமாக முடியின் வேர்பகுதியில் shampoo பயன்படுத்துவதும், முடியின் நீளப்பகுதிக்கு Conditioner பயன்படுத்துவதும் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், முடி எண்ணெயாக மாறுவது, பொடுகு அல்லது முடியின் ஆணிவேர்ப் பகுதியில் அரிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தால், உங்கள் முடியின் தன்மைக்கு ஏற்ற முறையினை பின்பற்றுவது முக்கியம்.
தினமும் Shampoo பயன்படுத்துவது எல்லோருக்கும் உகந்ததல்ல.உங்கள் முடியின் தன்மைக்கேற்ப தேர்வு செய்து வாரத்தில் 2 முறை பயன்படுத்துவது சிறந்தது.