அமெரிக்காவில் வெறும் 1 டொலருக்கு (இலங்கை மதிப்பில் சுமார் ரூ.329.75) ஒரு முழு வீடே விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த விடயம் சந்தையிலும் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக மலிவான இந்த வீடு அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள 'பான்டியாக்' (Pontiac, Michigan) நகரில், '70 E Ypsilanti Avenue' என்ற முகவரியில் அமைந்துள்ளது.
2 படுக்கையறைகள், ஒரு சமையலறை மற்றும் ஒரு குளியலறையைக் கொண்டுள்ள இந்த வீடு, ஒரு சிறிய குடும்பம் வசிக்க ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடு 1856-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 160 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு வரலாற்று வீடாகும்.
வீட்டின் நிலைமை முற்றிலும் மோசமானதால் இதன் சந்தை மதிப்பு கடுமையாகச் சரிந்து, இறுதியில் உரிமையாளர் இதை வெறும் 1 டொலருக்கு விற்க முடிவெடுத்தார்.