அமெரிக்காவின் சாண்டா கிளாரிடா பள்ளத்தாக்கில் உள்ள கிப்பன் குரங்குகள் ஒவ்வொரு முறையும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை பாடுவதாக கிப்பன் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கிப்பன் பாதுகாப்பு மையத்தில், ஐந்து இனங்களைச் சேர்ந்த சுமார் 40 கிப்பன் குரங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கிப்பன் குரங்குகள் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் விசித்திரமான பழக்க வழக்கங்கள் நிறைந்தவையாக உள்ளன.
வெள்ளைக் கன்னங்கள் கொண்ட கிப்பன் குரங்கு, குழுவின் பாடலைத் தொடங்க எப்போதும் தலைமை தாங்குகிறது.
மேலும் வயலட் என்ற கொண்டை கிப்பன் குரங்கு தனது கூட்டாளியான ட்ரூமனுடன் சேர்ந்து பல்லவியை முடிக்கிறது.
அந்தச் சிறிய குரங்குகள் ஒரு நாளைக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை பாடுகின்றன.
அழிந்து வரும் இந்த அரியவகை குரங்கினத்தைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.