பெங்களூர் நகரின் பிரபல Coffee நிறுவனமான 'Subko' நிறுவனத்திற்குச் சென்ற வாடிக்கையாளரை உருவக்கேலி(Body Shaming) செய்து, விலைப்பட்டியலில் அவருடைய பெயருக்குப் பதிலாக "குண்டான நபர்" என்று குறிப்பிட்டு அச்சடித்து வழங்கப்பட்ட செயல் அப்பகுதியில் மிகப்பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
குறித்த விலைப்பட்டியலின் புகைப்படத்தைப் பாதிக்கப்பட்ட நபர் Redditஇல் பகிர்ந்திருந்தார். பகிர்ந்த சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில் குறித்த சம்பவமானது விவாதத்திற்குரிய பேசு பொருளாக மாறியதையடுத்து சம்பந்தப்பட்ட 'Subko' நிறுவனமானது பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளது.
இனி இதுபோன்ற தவறேதும் நடக்காது என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.