இலங்கைக்கு எதிராக நடைபெறவிருக்கும் T20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக சஹிப்சதா பர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் பாகிஸ்தானின் T20 அணியில் புதிய தலைமை மாற்றம் ஏற்பட்டுள்ளது. T20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய சல்மான் அகாவிடமிருந்து பர்ஹான் இந்த பொறுப்பை ஏற்கின்றார்.
ஒக்டோபர் 9ஆம் திகதி இலங்கை – பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் ஆரம்பமாகும் நிலையில், இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் சல்மான் அகா சேர்க்கப்படவில்லை.