பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் முத்தரப்புத் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் சபை 16 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
குசல் மெண்டிஸ்ஸின் தலைமையில் களமிறங்கவுள்ள இலங்கை அணியின் குழாமில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்க இடம்பெறவில்லை என்பது இரசிகர்களை ஏமாற்றியுள்ளது.
அவர் அணியில் இல்லாமைக்கான காரணம் காயமா அல்லது தேர்வுக்குழுவின் முடிவா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில், பதும் நிஸ்ஸங்க மருத்துவ பரிசோதனையில் தகுதி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் செல்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.