தாய்வானில் நடைபெற்ற 'Mirror of the City' எனும் சர்வதேச ஒளி மற்றும் நிழல் கலைக் கண்காட்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி போஸ்டர் மற்றும் விளம்பர வடிவமைப்பாளர் கோபி பிரசன்னா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார்.
உலகளாவிய கலைஞர்கள் மற்றும் காட்சி அமைப்பாளர்கள் கலந்துகொள்ளும் இந்த சர்வதேசக் கலைத் திருவிழாவில் கோபி பிரசன்னா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருப்பது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெருமையாகக் கருதப்படுகின்றது.