கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 25ஆம் திகதி உலகமெங்கும் வெளியான திரைப்படம் ‘டோரதி’. 1990களின் பின்னணியில் சாதி வன்முறை மற்றும் இரு நண்பர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கார்த்திக் சுப்பராஜின் 10ஆவது திரைப்படமான இது இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கீர்த்தி சுரேஷின் சிறப்பான நடிப்பிற்காக தனுஷ், மணிரத்னம் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் திரைப்படத்தைப் பாராட்டி வரும் நிலையில், இயக்குநர் ராஜு முருகனும் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், \'டோரதி\' திரைப்படம் தமிழ் சினிமாவின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. பாலின ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய், அழகாய், ஆங்காரமாய் நம்முன் நிமிர்ந்து நிற்கிறாள். பேசாப் பொருளைப் பேசத் துணிந்து, அதை இவ்வளவு அற்புதமாய் செய்திருக்கும் தோழன் கார்த்திக் சுப்புராஜுக்குப் பாராட்டுகள்” என ராஜு முருகன் தெரிவித்துள்ளார்.