கொய்யா இலை ஒரு கைப்பிடி அளவு, புதினா இலை ஒரு கைப்பிடி அளவு, எலுமிச்சை தோல், கருவேலம் பட்டை, தேவையான அளவு கல் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு காய வைத்து பொடி செய்து வாரம் இரு முறை பல் துலக்கினால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பும் எலுமிச்சை சாறும் கலந்து வாயைக் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் குறைவடையும்.
சோம்பை வாயில் போட்டு மெல்லலாம் இது செரிமானத்தை மேம்படுத்தி வாய் நாற்றத்தைத் தடுக்கும். கற்றாழை சாற்றை சிறிதளவு தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு பேக்கிங் சோடா கலந்து வாய் கொப்பளிப்பது வர வாயின் அமிலத் தன்மையைச் சமன்படுத்தி துர்நாற்றத்தை உடனே நீக்கும்.