வெற்றிலை சாறை சிறிதளவு எடுத்து அதில் கற்பூரத்தை சேர்த்து நன்றாக குழைத்து தலைக்கு தேய்த்து வர தலைவலி குறைவடையும்.
கிராம்பை எடுத்து சிறிது நீர் சேர்த்து நன்றாக அரைத்து தலைவலி ஏற்படும் போது சிறிது எடுத்து நெற்றியில் பூசி வர தலைவலி குறைவடையும்.
புதினா இலைகளை இடித்து அதன் சார் எடுத்து நெற்றிப்பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறைவடையும்.
இஞ்சி கலந்த சூடான தேநீர் பருகுவதால் தலைவலி மற்றும் குமட்டல் குறைவடையும்.
நெற்றிப்பகுதியில் ஐஸ் கட்டி வைத்து சற்று ஒத்தடம் கொடுக்கும் போது தலைவலி சற்று குறைவடையும்.
தினமும் பொதுவான அளவு தண்ணீர் பருக வேண்டும்,உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து காணப்படும் போது தலைவலி ஏற்படுவது குறைவடைகிறது.