Vitamins, தாதுக்கள் உட்பட ஏராளமான சத்துகள் நிறைந்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் உடலின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
ஆகவே, பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்க்கப்பட்ட பானங்களைத் தினமும் பருகினால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் சரியாகும்.
எனவே, எவ்வகையான பானங்கள் எந்தெந்த நோய்களைக் குணப்படுத்தும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
● அன்னாசிப் பழத்துடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட பானத்தைக் குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் என்பன நீங்கும்.
● பச்சை அப்பிள் மற்றும் வெள்ளரிக்காய் சேர்க்கப்பட்ட பானத்தைக் குடித்தால் தலைவலியைத் தடுக்க முடியும்.
● கரட், அப்பிள், பேரிக்காய் ஆகிய மூன்றும் கலந்த பானத்தைப் பருகுவதால் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.
● அப்பிள் மற்றும் பீட்ரூட்டுடன் இஞ்சி கலந்த பானத்தைக் குடிப்பதால் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
● அப்பிள், பீட்ரூட், கரட் ஆகிய மூன்றும் சேர்க்கப்பட்ட பானத்தைக் குடித்தால் உடல் சோர்வு நீங்கும்.
● குடைமிளகாய், பீட்ரூட், கரட் ஆகிய மூன்றும் நிறைந்த பானத்தைக் குடித்தால் கண் தெளிவாகவும், சருமம் பிரகாசமாகவும் இருக்கும்.