மிகவும் இறுக்கமான பற்கள் கொண்ட அல்லது கூர்மையான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தும்போது, முடியில் சிக்கல் ஏற்பட்டு முடி உடைதல், நுனிப்பகுதி பிளவு மற்றும் Scalp எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
குறிப்பாக ஈரமான தலைமுடியை சீவும் போது கூடுதல் கவனம் தேவை. ஈரமாக இருக்கும்போது தலைமுடி எளிதில் நீண்டு உடையக்கூடிய நிலையில் இருக்கும். அதனால் அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தி, முதலில் முடியின் நுனியில் உள்ள சிக்கல்களை மெதுவாக அகற்றிவிட்டு, பின்னர் மேல்பகுதிக்கு செல்லலாம்.
மேலும், முடியை வலுக்கட்டாயமாக இழுத்து சீவுவதும் முடி உதிர்வை அதிகரிக்கலாம். நீண்ட தலைமுடி இருப்பவர்கள், முடியை சிறு பகுதிகளாக பிரித்து மெதுவாக சீவுவது நல்லது.
சீப்பை சுத்தமாக வைத்திருப்பதும் அவசியம்.
சீப்பில் தேங்கும் எண்ணெய், இறந்த சருமத் துகள்கள் மற்றும் தூசி மீண்டும் தலைமுடி மற்றும் Scalpக்கு செல்லக்கூடும். எனவே சீப்பை அவ்வப்போது சுத்தம் செய்து, சேதமடைந்த பற்கள் கொண்ட சீப்பை மாற்றுவது சிறந்தது.