29 Views
அது காலையிலிருந்து மாலை வரை நேரத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்கொண்டே இருக்கும் ஒரு இயற்கை அதிசயம்.
விடியற்காலையில் மென்மையான இளஞ்சிவப்பு நிறத்தில் தொடங்கும் இந்த மலை, மாலை பொழுதினில் ஊதா நிறமாக மாறி கண்கொள்ளாக் காட்சியைத் தருகிறது.
அவுஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மாபெரும் மலைக்கு 'உலுரு' என்று பெயர்.
இந்த மலை நிஜமாகவே தன் நிறத்தை மாற்றுவதில்லை.
இந்த மணற்பாறையின் மேற்பரப்பில் இரும்புத் தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
சூரிய ஒளி வெவ்வேறு கோணங்களில் இதன் மீது விழும்போது, அது நிறம் மாறுவது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகிறது.
'உலுரு' என்பது வெறும் புவியியல் அதிசயம் மட்டுமல்ல. இங்குக் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் 'அனங்கு' (Anangu) என்ற அவுஸ்திரேலிய பழங்குடியின மக்களின் மிகவும் புனிதமான இடமுமாகும்