முருங்கை கீரையில் இரும்புச்சத்து மற்றும் Vitamin C காணப்படுவதால் இரத்த சோகையை நீக்கி கண் பார்வையை மேம்படுத்தும்.
அத்துடன் நினைவாற்றலை அதிகரிக்கும், மூளைச் செல்கள் பலம் பெறவும் வல்லாரைக் கீரையை சாப்பிட வேண்டும்.
உடல் அழகை அதிகரித்து கண் பார்வை அதிகரிக்க பொன்னாங்கண்ணிக் கீரை சிறந்தது. மூட்டு வலி, கை, கால் முடக்கம் மற்றும் வாதப் பிரச்சினைகளை குணப்படுத்த முடக்கத்தான் கீரை சிறந்தது.
வெந்தயக்கீரை உடலின் வெப்பத்தைத் தணிக்கும், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவும். உடலில் உள்ள பித்தத்தைக் குறைக்கும், இரத்தத்தை தூய்மையாக்கவும் அகத்திக்கீரை உதவுகிறது.