இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியிலிருந்து தனஞ்சய டி சில்வா விலகுவதாக அறிவித்திருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து குசல் மெண்டிஸ், டெஸ்ட் அணியின் தலைவராக செயற்படவுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.