இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பும்ரா 3 விக்கட்டுகளை வீழ்த்தியதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மற்றுமொரு மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் வரலாற்றுப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் பும்ரா இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜவகர் ஸ்ரீநாத்தின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.