ஓட்டுநர் இல்லாமல் தானாக இயங்கும் Robotaxi சேவையை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ஜப்பான் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக Toyota நிறுவனத்துடன் இணைந்து Waymo நிறுவனம் செயற்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், Toyota நிறுவனத்தின் bZ4X மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மனித ஓட்டுநரின் தலையீடு இன்றி இயங்கக்கூடிய Level 4 தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பம் இதில் இடம்பெறவுள்ளது.
ஏற்கெனவே அமெரிக்காவின் சில நகரங்களில் Robotaxi சேவையை வழங்கிவரும் Waymo, தற்போது ஜப்பானிலும் தனது சேவையை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இந்தத் தொழில்நுட்பம் எதிர்காலப் போக்குவரத்துத் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.