96 Views
இத்திரைப்படத்தில் கணேசா, தாண்டியப்பா எனும் தனது உதவியாளர்களை அழைப்பதும், தனுஷ் ஏற்று நடித்துள்ள திரு கதாபாத்திரத்திடம் சிலரைத் தாக்குமாறு கூறுவதும்தான் தனது முக்கிய வேலையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காகவே சுமார் ஆறு மாதங்களாகப் பணியாற்றியதாகவும், “இதெல்லாம் ஒரு Role-ஆ?” என்ற தொனியில் அவர் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், தனது கருத்துகளை விளையாட்டாகவே கூறியதாகத் தெளிவுபடுத்திய மம்மூட்டி, திரைப்படம் தீவிரமான கதையைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் குறித்த எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ள நிலையில், மம்மூட்டியின் இந்த பேச்சும் தற்போது பேசுபொருளாகியுள்ளது