சுரைக்காயில் அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால் கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூடு, நாவறட்சி மற்றும் நீர் இழப்பைத் தடுத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
சுரைக்காயில் கொழுப்புச் சத்து மிகக் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து மற்றும் காரத்தன்மை வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை , அஜீரணம், வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.
சுரைக்காயில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க உதவுகின்றன. மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கிறது.
சுரைக்காய் ஒரு இயற்கை சிறுநீர் பெருக்கியாகச் செயல்பட்டு, சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் உதவுகிறது. சுரைக்காயில் உள்ள Choline என்ற சத்து மூளை செயல்பாட்டை மேம்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கவும், நல்ல தூக்கத்தைப் பெறவும் உதவுகிறது.