88 Views
இந்நிலையில், அப்பகுதியிலுள்ள கடையொன்றில் இளைஞர் ஒருவர் தினமும் ஒரு நபருக்குத் தேவையான அளவை விட அதிகமான அரிசியைக் கொள்வனவு செய்து செல்வதை காவல்துறையினர் அவதானித்தனர். அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் இரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றனர்.
மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெகு தொலைவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்திருந்த குகையொன்றை காவல்துறையினர் கண்டறிந்தனர். பிளாஸ்டிக் தாள்களால் மறைக்கப்பட்டிருந்த அந்தக் குகைக்குள் சோதனையிட்டபோது, அங்கு இரண்டு மாதக் குழந்தையுடன் 15வயது சிறுமி தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, 23 வயதுடைய குறித்த இளைஞரைக் கைது செய்த காவல்துறையினர், மூவரையும் பொறுப்பேற்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதில்
குறித்த பெண் குழந்தை அந்தக் குகைக்குள்ளேயே பிரசவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தொப்புள் கொடியானது, கித்துல் கைத்தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கூரிய ஆயுதமொன்றினால் வெட்டப்பட்டு வனப்பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தியே தாய்க்கும் சேய்க்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், கித்துள் பாணி தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பாத்திரமொன்றிலேயே குழந்தையை நீராட்டியதாகவும் கைது செய்யப்பட்ட இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மீட்கப்பட்ட 15 வயது சிறுமியும், இரண்டு மாதக் குழந்தையும் மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த இளைஞர் குகையில் மறைந்திருப்பதற்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில், அவரது 36 வயதுடைய உறவினர் ஒருவரும் உடுதும்பர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.