இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவியா மாறன் ஆகியோர் கிரீஸில் திருமண பந்தத்தில் இணைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணத்தைத் தொடர்ந்து இன்று (14) இருவரும் சென்னைக்குத் திரும்பியுள்ளனர். இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் இரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.
சென்னை விமான நிலையத்தில் இருவரும் வந்திறங்கிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாகச் சென்னைக்குத் திரும்பியுள்ள இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளன.