65 Views
‘ஜெயிலர் 2’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்துப் பெற்றனர்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நெல்சன், “திரையரங்குகள் அதிர்கின்றன! தலைவரின் மேஜிக்கே தனி! ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த அபரிமிதமான அன்பிற்கும், வரவேற்பிற்கும் இரசிகர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! இரசிகர்கள் திரைப்படத்தைக் கொண்டாடும் விதத்தைப் பார்ப்பதை விட, சிறந்த தருணம் வேறெதுவும் இல்லை! உங்கள் அன்புக்கும், ஆதரவிற்கும் அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.