‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் போதி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததது.
'ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் போதி என்ற கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார்