நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ரச்சின் ரவீந்திர, விளம்பரப் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் வலது தோள்பட்டையில் காயமடைந்துள்ளார். இதனால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இதையடுத்து மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆரம்பகட்ட பரிசோதனையில், தோள்பட்டையில் பெரிய அளவிலான கட்டமைப்பு பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அடுத்த சில வாரங்களில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை மற்றும் பயிற்சியின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அவர் மீண்டும் போட்டிகளில் களமிறங்கும் காலம் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.