கார் வாங்கும்போது அதன் விலையை மட்டும் கணக்கில் எடுத்தால் போதாது. அதன்பின்னர் காப்புறுதி, எரிபொருள், சேவை, டயர், Battery, Brake பாகங்கள், Parking மற்றும் சுங்கக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தொடர்ந்து ஏற்படுகின்றன.
குறிப்பாக, காரின் பயன்பாட்டைப் பொறுத்து டயர் மற்றும் Batteryயை சில ஆண்டுகளில் மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். மேலும், Brake, குளிரூட்டி உள்ளிட்ட பாகங்களுக்கும் பராமரிப்பு செலவுகள் வரக்கூடும்.
எனவே, கார் வாங்கும் முன் அதன் விலையுடன் மட்டும் நின்றுவிடாமல், அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படக்கூடிய அனைத்து பராமரிப்பு மற்றும் பயன்பாட்டுச் செலவுகளையும் கணக்கிட்டு பட்ஜெட் அமைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.