நிலவில் புதிதாக உருவான ‘McGetchin’ எனப் பெயரிடப்பட்ட மிகப்பெரிய பள்ளத்தை நாசாவின் சந்திர ஆய்வுக் கருவி கண்டறிந்துள்ளது. சுமார் 728 அடி அகலமும், 141 அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளம், சமீப காலத்தில் சூரியக் குடும்பத்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய புதிய பள்ளமாக கருதப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 11 முதல் மே 22ற்குள், கட்டிடம் அளவிலான விண்கல் அல்லது வால் நட்சத்திரத் துண்டு நிலவில் மோதியதால் இந்தப் பள்ளம் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய பெரிய தாக்கம் நிலவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதைவிட அரிதாக நிகழக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த மோதலால் பள்ளத்தைச் சுற்றியுள்ள சுமார் 4 மைல் பரப்பில் வெப்பநிலை மாற்றமும் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.