ஆசியாவின் பணக்காரர்களின் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானியைப் பின்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறார் 'TikTok' நிறுவனத் தலைவர் ஜாங் யிமிங்.
'TikTok'இன் தாய் நிறுவனமான 'ByteDance' நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்காக DOUBAO மற்றும் SEEDANCE போன்ற புதிய AI கருவிகளை உருவாக்கி AI துறையில் காட்டிய அசுர வேகமே இவரது இந்த பிரம்மாண்ட வளர்ச்சிக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ஆசியாவின் முதன்மைப் பணக்காரராக மாறியுள்ள ஜாங் யிமிங்கிற்கு ஏராளமான தொழிலதிபர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.