ஆரோக்கியமான வாழ்வில் கண்களின் பாதுகாப்பென்பது முக்கியமானதொன்றாகும். கண்களை முறையாகப் பராமரித்தால் மட்டுமே நீண்ட காலத்திற்குப் பார்வையானது தெளிவாக இருக்கும்.
ஆகவே,பார்வையை ஆரோக்கியமாக வைத்திருக்க சில எளிய பழக்கங்களைத் தினசரி நாம் கடைபிடிப்பது அவசியமாகும். அவற்றுள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்...
● காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்ற சத்தான உணவுகளைத் தினமும் உட்கொள்ளல்.
● நீண்ட நேரம் தொலைபேசி அல்லது கணினியைப் பயன்படுத்தும்போது இடையிடையே திரையிலிருந்து பார்வையை விலக்கிக் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
● போதுமான தூக்கம் கொடுத்து, கண்களின் சோர்வைக் குறைக்க வேண்டும்.
● வெளியில் செல்லும்போது சூரிய ஒளியிலிருந்து கண்களைப் பாதுகாக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தல்.
● புகை மற்றும் தூசி போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்க வேண்டும்.
● பார்வை மங்குதல், அடிக்கடி தலைவலி, கண் வலி போன்றவை இருந்தால் கண் மருத்துவரிடம் பரிசோதனை செய்வது அவசியமாகும்.
இவற்றைப் பின்பற்றுவதோடு, பார்வைக் குறைபாடுகள் ஏதும் இருப்பின் கண் மருத்துவர் ஒருவரை நாடுவது அவற்றை ஆரம்பத்திலேயே சரிசெய்ய உதவியாக இருக்கும்.