காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் உண்ணக்கூடிய பல ஆரோக்கியமான உணவுகள் எமது வீட்டில் இருக்கின்றன. ஆனால், சில உணவுகளை வெறும் வயிற்றில் நாம் எப்போதும் உண்ணக்கூடாது. இல்லையேல், அவை உடலுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமைய வாய்ப்புள்ளதாகப் புதிய ஆய்வொன்றில் சில உணவுகளை குறிப்பிட்டு அறிக்கை வெளியாகியுள்ளது.
அவ்வாறு நாம் வெறும் வயிற்றில் உண்ணக்கூடாத உணவுகளையும், அவ்வாறு உண்டோமேயானால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்பதையும் பார்க்கலாம்.
● தக்காளியை எப்போதும் வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. மீறி உண்டால் அதிலுள்ள அசிட் அமிலம் வயிற்றில் கற்களை உருவாக்கும்.
● மருந்து மற்றும் மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக் கூடாது. காரணம் அவை வயிற்றிலுள்ள படலத்தை அழிப்பதோடு, வயிற்றில் உள்ள அமிலத்துடன் கலந்து உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.
● குளிர்பானம்(சோடா) குடிக்கக்கூடாது. இவற்றில் உள்ள அசிட்டுகள் வயிற்றில் கலந்தால், வாந்திபேதி மற்றும் அசௌகரித்தை ஏற்படுத்தும்.
● வெறும் வயிற்றில் காரமான உணவுகளை உண்ணக்கூடாது. ஏனெனில், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் அதிகமாகச் சேர்ந்து வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும்.
● Coffee மற்றும் தேநீர் அருந்தக்கூடாது. வெறும் வயிற்றில் இவற்றைக் குடிப்பதால் வயிற்றுப் படலம் பாதிப்படையும். கட்டாயமாக அருந்த வேண்டுமென்றால் ஒரு கோப்பை தண்ணீர் குடித்த பின் Coffee அல்லது தேனீரைப் பருகலாம்.
● தயிர் சாப்பிடக்கூடாது. ஆரோக்கியமான உணவாகத் தயிர் இருந்தாலும், வெறும் வயிற்றில் உண்ணக்கூடாது. அப்படி உண்டால், தயிரில் உள்ள பக்டீரியாவானது வயிற்றுப் படலத்தைப் பாதிப்படையச் செய்யும்.
● வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. இதனைக் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் உடலில் உள்ள கல்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும்.