நடிகர் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்க, ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார்.
'சத்ரியன்' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் விக்ரம் பிரபு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகும் திரைப்பபடம் இதுவாகும்.
இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு மற்றும் அமலா ஷாஜியுடன் சிவத்மிகா உள்ளிட்டப் பலர் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு மற்றும் முதற்கட்ட பணிகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
தனது திரைப்பயணத் தொடக்கம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அமலா ஷாஜி, "ஒரு காலத்தில் கனவாக மட்டுமே கண்ட ஒன்று இப்போது நனவாகியிருக்கிறது. இது என்னுடைய முதல் திரைப்படம், இத்தருணத்தை என்றென்றும் போற்றுவேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர், தயாரிப்பாளர், படக்குழுவினர் மற்றும் தனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.